Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » யார் உயர்ந்தவர்
 
பக்தி கதைகள்
யார் உயர்ந்தவர்

மகாராஜா ஒருவருக்கு வெகுநாட்களாக ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. இதுவரை யாரும் அதற்கு விடை கூறவே இல்லை. துறவி, குடும்பஸ்தன் இவர்களில் யார் உயர்ந்தவர்? என்பதுதான் அந்த சந்தேகம். யாராலும் தீர்க்கமுடியாத அந்த சந்தேகத்தை தான் தீர்ப்பதாக பெரியவர் ஒருவர் மன்னனிடம் கூறினார்.
மன்னனும் ஒப்புக்கொண்டு பெரியவருடன் மாறுவேடத்தில் கிளம்பினார். பெரியவர், மகாராஜாவை அடுத்த நாட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கே நகரே கோலாகலம் பூண்டிருந்தது. காரணம் அந்த நாட்டின் இளவரசிக்கு சுயம்வரம்! எத்தனையோ இளவரசர்கள் வந்திருந்தார்கள் பேரழகியான இளவரசிக்கு யாரையும் பிடிக்கவில்லை. அப்போது அந்த மண்டபத்துக்குள் மொட்டைதலையுடன் இளம் துறவி ஒருவர் வந்தார். அவரைப் பார்த்ததும் இளவரசி மெய்மறந்து போய்விட்டாள். கட்டினால் இவரைத்தான் கட்டுவேன் என்று, மாலையை எடுத்து துறவியின் கழுத்தில் போட்டாள். பதறிப் போய்விட்டார், இளம் துறவி, முடியாது...! என்று கதறினார். கோபத்துடன் மண்டபத்தை விட்டு வெளியேறினார். மணந்தால் அவரையே மணப்பேன். இல்லாவிட்டால் உயிர் துறப்பேன்! என்று துறவியைப் பின் தொடர்ந்து ஓடினாள் இளவரசி.

துறவி காட்டுக்குள் மறைந்தார். இளவரசியும் அங்கே விரைந்தாள். அவர்களுக்குத் தெரியாமல் பெரியவரும் மாறுவேடத்தில் இருக்கும் மகாராஜாவும் தொடர்ந்து சென்றார்கள். இளம் துறவிக்கு காடு தண்ணீர்பட்டபாடு. உள்ளே நுழைந்தவர், இருள் வருவதற்குள் எங்கேயோ போய் மறந்துவிட்டார். இளவரசி தவித்துப் போனாள். பதறிப் போனாள். ஒரு மரத்தடியில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள் இளவரசி. பெரியருவம், மகாராஜாவும் அவள் அருகே சென்றார்கள். கவலைப்படாதே இளவரசியே, நாங்கள் உனக்கு வழி காட்டுகிறோம், இப்போது இருளாகிவிட்டதால் இந்த மரத்தடியிலேயே தங்கி ஓய்வெடுக்கலாம், காலையில் பத்திரமாய் உன்னை ஊருக்கு அனுப்பி வைக்கிறோம் என்று வாக்குறுதி அளித்தார்கள்.

அந்த மரத்தில் ஒரு குருவிக் குடும்பம் வசித்து வந்தது ஒரு தாய், ஒரு தந்தை மூன்று குழந்தைகள் என்று ஐந்து குருவிகள்! அப்பாக் குருவி, அம்மா குருவியிடம் கேட்டது, அன்பே, நம் மரத்தடிக்கு விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் குளிரில் நடுங்காமல் இருக்க கொஞ்சம் நெருப்பு இருந்தால் நன்றாக இருக்குமே என்று கூறியபடி பறந்து சென்று எங்கிருந்தோ தணல் துண்டு ஒன்றைக் கொண்டுவந்து, அவர்கள் முன்னால் போட்டது. மகிழ்ந்து போன அந்த மூவரும், சில சுள்ளிகளைச் சேர்த்து, தீ மூட்டிக் குளிர் காய்ந்தார்கள். அப்போதும் குருவிக்கு மனநிறைவு ஏற்படவில்லை. மீண்டும் மனைவியைப் பார்த்து, பாவம் இந்த 3 விருந்தினர்களும் கடும்பசியில் இருக்கிறார்கள், இந்த இருளில் அவர்களுக்கு நம்மால் எதுவும் கொடுக்க முடியவில்லை. நாமோ இல்லற வாசிகள் வீடு தேடி வருபவர்களின் பசியைத் தீர்ப்பது நமது கடமை. அதனால் எனக்கு முடிந்ததை நான் செய்தாக வேண்டும். அதனால் என் உயிரைத் தியாகம் செய்தாக வேண்டும் அதனால் என் உயிரைத் தியாகம் செய்து அவர்களுக்கு உணவாகப் போகிறேன் என்று கூறியபடி, சரேலெனப் பாய்ந்து குளிர்காய அவர்கள் மூட்டியிருந்த தீயில் தொப்பென விழுந்தது. மூவரும் அதைக் காப்பாற்ற முனைவதற்குள் செத்துப் போயிற்று குருவி.

அம்மா குருவி யோசித்தது, மூன்று விருந்தினர்களின் பசிக்கு ஒரு குருவியின் இறைச்சி எப்படிப் போதும்? கணவரின் முயற்சி வீணாகாமல் காப்பது மனைவியின் கடமையல்லவா? என்று நினைத்தபடி தானும் அந்தத் தீயில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டது. குஞ்சுக் குருவிகள் மட்டும் சும்மா இருக்குமா என்ன? விருந்தினர்கள் வயிறு நிரம்ப உண்ணட்டும் என்று தாங்களும் தீயில் பாய்ந்தன. மூன்று பேரும் அதிர்ந்து போனார்கள் அந்த இறைச்சியை உண்ண அவர்களுக்கு மனம் வருமா என்ன? உணவு எதுவும் உண்ணாமல் வருத்தத்துடன் அன்றைய இரவைக் கழித்தார்கள். பொழுது விடிந்தது. இளவரசிக்குச் சரியான வழியை காண்பித்து அனுப்பி வைத்தார்கள். இப்போது பெரியவர் பேசினார் மன்னா, உன் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதா?

மன்னன் புரிந்தது போல் மவுனமாய் அவரையே பார்த்தார். ஆமாம் மன்னா, தான் இருக்குமிடத்தில் ஒவ்வொருவரும் உயர்ந்தவர்கள். நீ இல்லறத்தானாக வாழ விரும்பினால் இந்தப் பறவைகளைப் போல், எந்த விநாடியும் பிறருக்காக உன்னைத் தியாகம் செய்வதற்குத் தயராக வேண்டும். உலகைத் துறந்து வாழ விரும்பினால், மிக அழகான பெண்ணையும் பேரரசையும் துரும்பென உதறிச் சென்ற அந்த இளம் துறவியைப் போல் இரு. இல்லறத்தானாக விரும்பினால் உன் வாழ்வை மற்றவர்களின் நன்மைக்கான ஒருபலியாக அர்ப்பணித்து விடு. துறவு வாழ்க்கைத் தேர்ந்தெடுத்தால் அழகையோ, பணத்தையோ, பதவியையோ ஏறெடுத்தும் பார்க்காதே! அவரவர் நிலையில் அவரவர் பெரியவரே. ஆனால் ஒருவரின் கடமை, மற்றவரின் கடமை ஆகாது! என்றார் பெரியவர். மன்னன் தலை வணங்கி தன் தவறை உணர்ந்தான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar