|
மகான் ஒருவரிடம் அவருடைய சீடர்கள், குருவே, உழைப்பின் மதிப்பை எப்படி உணர முடியும்? என்று கேட்டனர். அதற்கு அவர் சமயம் வரும்போது கூறுவதாகச் சொன்னார். ஒரு நாள், மழை பெய்து தெருவெல்லாம் ஒரே சேறாக இருந்தது. அப்போது அந்த வழியாகப் போனான் ஒருவன். அவனது செருப்புகளில் சேறு படிந்தது. உடனே அவன் தனது தோளில் கிடந்த பட்டுத் துண்டினை எடுத்து செருப்பைத் துடைத்துவிட்டு அதனைப் போட்டுக் கொண்டான். இதை கவனித்துக் கொண்டிருந்த மகான், அவனை அழைத்து, அவனது செயலுக்குக் காரணம் கேட்டார். இந்தப் பட்டுத் துண்டு எங்கள் குடும்பத்தின் பரம்பரை சொத்து. செருப்பு என் சொந்த உழைப்பில் வாங்கியது! என்றான் அவன். இப்போது சீடர்களை நோக்கி இப்போது புரிகிறதா உழைப்பின் மதிப்பு எது என்று! என்றார் மகான். |
|
|
|