|
கடுமையான கோடைகாலம் அது. ஒருநாள் மதியவேளையில் உறங்கிக் கொண்டிருந்த தன் குருவுக்கு விசிறிக் கொண்டிருந்தான் சீடன் ஒருவன். களைத்துப்போய் அப்படியே தூங்கி விட்டான். சிறிதுநேரம் கழித்து விழித்தெழுந்த குரு, சீடனுக்கு வியர்த்திருப்பதைப் பார்த்து தாமே அவனுக்கு விசிறத் தொடங்கினார். குளிர்ந்த காற்று பட்டதும் சட்டென்று உறக்கம் கலைந்து எழுந்த சீடன், குருநாதர் தனக்கு விசிறுவதை பார்த்து பதறிப்போனான். அதைக் கண்ட குரு எதற்காக இப்படி? நீயும் என்னைப் போல் ஓர் உயிர். எனக்கு வியர்த்தபோது நீ விசிறினாய்; உனக்கு வியர்த்ததும் நான் விசிறினேன். இதில் மரியாதை குறைய என்ன இருக்கிறது? தன்னைப்போல் பிறரையும் எண்ணுவதில் எவ்வித இழுக்கும் இல்லை என்ற பாடத்தை உணர்ந்தான் சீடன்.
|
|
|
|