|
ஒரு கிராமத்துக்கு துறவி ஒருவர் வந்தார். எல்லோரும் அவரிடம் ஆசி வேண்ட, அவரவர் செயல்தான் அவரவர் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. எனவே, நல்லதையே செய்யுங்கள்.. நினையுங்கள்.. அப்போது எவருடைய ஆசியும் உங்களுக்குத் தேவைப்படாது என்றார், துறவி. ஆனால், நல்லதையே செய்பவர்கள் துன்பப்படுவதையும், தீமையே புரிபவர்கள் மகிழ்வாக இருப்பதையும் நடைமுறையில் பார்க்க முடிகிறதே? கூட்டத்தில் சிலர் குரல் எழுப்பினார்கள். அவரவர் செய்கைதான் அவரவர் பாதையில் பூவையோ முள்ளையோ விரித்து வைக்கிறது என்பது நிஜம். ஆனால் நல்லவர்கள் முதலில் முள்ளில் நடந்தாலும் பின்னர் மலரில் சந்தோஷமாக நடக்கிறார்கள். தீயவர்கள் மலரில் நடந்தபின் முள்ளில் நடந்து கஷ்டப்படுகிறார்கள்..! அமைதியாகச் சொன்னார் துறவி.
|
|
|
|