|
ஞானி ஒருவர் தனது சீடர்களுடன் கேதார்நாத் யாத்திரை மேற்கொண்டார். பயணம் மிகவும் கஷ்டமாக இருந்தது. எப்படியோ, சிரமப்பட்டு யாத்திரையை முடித்து திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பார்வையற்ற பெண்மணி ஒருவர் தடியை ஊன்றிக்கொண்டு தட்டுத் தடுமாறி மேலே ஏறிக் கொண்டிருந்தார். அப்போது சீடன் ஒருவன் அவரிடம், அம்மா! இவ்வளவு கஷ்டப்பட்டு மேலே போய் என்ன பார்க்கப் போகிறீர்கள்? என்று கேட்டார். இதை செவிமடுத்த ஞானி, அந்தத் தாயாரால் இறைவனைப் பார்க்க முடியாதுதான். ஆனால் இறைவனால் அவரைப் பார்க்க முடியும் அல்லவா! என்றார். சீடன் உண்மையை உணர, ஞானியின் திசை நோக்கி கை கூப்பினாள் அந்தத் தாய்.
|
|
|
|