|
ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் வந்த ஒருவர், ஐயா! நீங்கள் காளியைப் பார்த்திருக்கிறீர்களா? ஓ பார்த்திருக்கிறேனே! காலையில் கூட அவளிடம் பேசினேன். நீங்கள் பார்த்தது உண்மை என்றால் எனக்குக் காட்டுங்கள். பரமஹம்சர் தெளிவானவர். அவர் வந்தவரிடம், நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள்? நான் மருத்துவர். அப்படியானால் என்னை ஒரு டாக்டராக ஆக்குங்களேன் அது எப்படி? நீங்கள் டாக்டருக்குப் படிக்க வேண்டுமே. டாக்டராவதற்கு ஒரு படிப்பு வேண்டுமென்றால் கடவுளைப் பார்க்க ஒரு படிப்பு வேண்டாமா? நான் அதைப் படித்திருக்கிறேன். நீங்களும் அதைப் படித்தால் கடவுளைக் காணலாம் என்றார்.
|
|
|
|