|
துறவி ஒருவர் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார். நல்ல நண்பர்களைப் பெறுவது கடினம். ஆனால் பகைவர்களைப் பெறுவதற்கு ஒரு சுலபமான வழி இருக்கிறது என்றார். கூட்டத்தில் இருந்த இளைஞன், அந்த வழி என்னவென்று சொல்லுங்கள்? நாங்கள் அந்த வழியில் செல்லாமலிருப்போம் என்றான். புன்முறுவலுடன் துறவி, கர்வம்தான் பகைவரைப் பெறும் எளிய வழியாகும். தன் நண்பர்கள் முன்னிலையில் தான் அவர்களை விட உயர்ந்தவன் என்று காட்டிக் கொண்டால் அதுவே போதும். நாளடைவில் அந்த நண்பர்கள் அவனுக்குப் பகைவர்களாக மாறி விடுவார்கள் என்று விளக்கம் தந்தார். |
|
|
|