|
ஒரு துறவி இறைவன் தன் முன்னே தோன்ற வேண்டுமென்று தன் வாழ்நாள் முழுவதும் தவமிருந்தார். தினமும் தன்னிடம் உள்ளதை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏழைகளுக்கு பங்கிட்டுக் கொடுப்பது அவரது இறைப்பணிகளுள் ஒன்று. ஒருநாள் அவர் விரும்பியபடியே கடவுள் அவர் முன்னே தோன்றினார். பரவசத்தால் மெய் மறந்தார் துறவி. அப்போது தினமும் அன்னமிடும் நேரத்தை நினைவூட்டும் அழைப்பு மணி ஒலித்தது. என்ன செய்வது என்று குழம்பினார். முடிவில் ஒரு தீர்மானத்துக்கு வந்தவராய் கடவுளை அப்படியேவிட்டு விட்டு அன்னதானப் பணிக்குத் திரும்பினார்.
எல்லா ஏழைகளுக்கும் உணவிட்டு முடித்து மீண்டும் உள்ளே வந்தபோது, இறைவன் தனக்காகக் காத்திருப்பதைக் கண்டு மனம் நெகிழ்ந்தார். கண்ணீர் மல்க இறைவனுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது கடவுள் சொன்னார், நீ உன் நித்திய அறப்பணிக்குப் போகாதிருந்தால் நான் மறைந்திருப்பேன். ஏழைகளின் பசி தீர்ப்பதே உண்மையான இறைப்பணி! |
|
|
|