|
குரு ஒருவரிடம் பாடம் கற்க வந்த இளைஞன் ஒருவன் சந்தேகம் ஒன்றைக் கேட்டான். ஐயா, மனிதரின் அழகு, தோற்றத்தைக் காட்டிலும் செயல்தான் நிர்ணயிக்கிறது என்றீர்களே, அது எப்படி? ஒரு பானை நிறைய பாயசம் இருக்கிறது. அருகே ஓட்டையான தங்கக் கரண்டி ஒன்றும், நல்ல நிலையிலு<ள்ள மரக் கரண்டி ஒன்றும் இருக்கின்றன. மிகுந்த பசியோடு வருபவன் அந்தக் கரண்டிகளில் எதனை எடுப்பான்? கேட்டார் குரு. பசியோடு இருப்பவனுக்கு ஓட்டைக் கரண்டி உதவாதே.. மரக் கரண்டியைத்தான் எடுப்பான்..! உதவுதல் என்னும் பண்பு, தங்கத்தைவிட மரத்தை அழகானதாகக் காட்டியதுபோலத்தான், பகட்டானவனைவிட பண்பானவன் அழகாகத் தெரிவதும்... குரு சொல்ல, உணர்ந்தான் இளைஞன். |
|
|
|