|
ஒரு துறவியிடம் வந்த நாத்திகன் ஒருவன், எல்லோருடைய விருப்பத்தையும் கடவுளால் நிறைவேற்ற முடியாததுபோல் தெரிகிறதே? எனக் கிண்டலாக கேட்டான். எதனால் அப்படிச் சொல்கிறாய்? விறகு வெட்டி எப்போதும் குளிர் காலமாக இருக்க வேண்டுமென்று வேண்டுகிறான். பழவியாபாரி மழையும் இருக்கக் கூடாது; வெயிலும் காயக்கூடாது என்று பிரார்த்திக்கிறான். உழவனோ மழை பெய்ய வேண்டும் என்று வேண்டுகிறான். செங்கல் சூளைக்காரன் மழை வரக்கூடாது என்று வேண்டுகிறான். அதனால் கடவுளே நினைத்தால்கூட எல்லோருடைய வேண்டுதலையும் நிறைவேற்ற முடியாது என்று தெளிவாகிறதே! என்றான். அது சரி! இப்போது வானிலை எப்படி உள்ளது? மிக வெப்பமாக உள்ளது. சென்ற வாரம் எப்படி இருந்தது? திங்கள், செவ்வாயில் மழை பெய்தது. வெள்ளியன்று குளிராக இருந்தது என்றான் நாத்திகன். பார்த்தாயா? இந்த இரண்டு வாரத்திற்குள்ளேயே கடவுள் எல்லோருடைய விருப்பத்தையும் நிறைவேற்றி உள்ளார் என்றார் துறவி. |
|
|
|