|
பக்தி உள்ள மனதுக்கும் பக்தி இல்லாத மனதுக்கும் என்ன வித்தியாசம்? என குருவிடம் கேட்டான், சீடன். பக்தி நிறைந்த மனம் பிரகாசமாக இருக்கும்; தூய்மையானதாக இருக்கும் என்று விளக்கினார் குரு. சீடனுக்கு சந்தேகம் தீரவில்லை. உடனே குரு, அப்போதுதான் துவைத்து வைத்திருந்த இரண்டு துணிகளை சீடனிடம் கொடுத்து, ஒன்றை வெயில் நன்கு காயும் இடத்திலும், மற்றொன்றை இருள் அடைந்த பகுதியிலும் காயப் போடச் சொன்னார். சில மணி நேரம் கழித்துப் பார்த்தபோது, வெயிலில் போட்ட துணி சிறிதும் ஈரமில்லாமல் பளிச்சென காய்ந்திருந்தது. அதே சமயம் இருளில் போடப்பட்ட துணி ஈரத்துடனும் முறை நாற்றத்துடனும் இருந்தது. பக்தியால் அழுக்குகள் எல்லாம் நீங்கி மனது பளிச்சிடும். அதே சமயம் பக்தியற்ற மனதில் துர்க்குணங்கள் குடிகொண்டு விடும்! என்று விளக்கம் தந்தார் குரு. |
|
|
|