|
குருகுலவாசம் முடிந்து சீடர்கள் கிளம்பும் போது, தர்மத்தைக் காத்து நீதி வழி நடந்திடுங்கள் என குரு ஆசியளித்தார். தர்மம் வேறு; நீதி வேறா? என சந்தேகம் கொண்ட சீடர்கள், குருவிடமே விளக்கம் கேட்டனர். புன்னகைத்த குரு, நீதி என்பது இடத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப மாறும். உதாரணமாக முன் விரோதத்தால் சண்டையிட்டு ஒருவனைக் கொல்வது கொலை. ஆனால் எதிரி நாட்டின் வீரர்களோடு சண்டையிட்டுக் கொல்வது கொலையல்ல; வீரம்! இப்படி நீதி மாறக்கூடியது. எனவே அதைக் காத்திட முடியாது. ஆனால் தர்மம் மாறாதது. அதனைக் காப்பாற்றுவது அவசியம்! என தெளிவுபடுத்தினார். உணர்ந்த சீடர்கள் குருவை வணங்கி விடைபெற்றனர்.
|
|
|
|