|
நீண்ட காலம் தவம் புரிந்தும் இறைவனைக் காண முடியாத சாதகன் ஒருவன் தனது குருவிடம், ஐயா, இறைவன் இருக்கிறானா? என்று கேட்டான். அதற்கு குரு, இரவில் ஆகாயத்தில் நட்சத்திரங்கள் தென்படுகின்றன. ஆனால் சூரியோதயமானதும் பகலில் அவை தென்படுவதில்லை. அதனால் பகலில் நட்சத்திரங்களே இல்லையென்று கூற முடியுமா? அஞ்ஞானத்தின் விளைவாக இறைவனைக் காண முடியாது போனதனால் இறைவன் இருக்கிறானா என்று கேள்வியெழுப்பக்கூடாது. அவன் எப்போதும் எங்கும் உள்ளான் என்றார். |
|
|
|