|
சீடன் ஒருவன் தன் குருவிடம், ஒரே பிறவியில் இறைவனை அடையமுடியாதா? என்று கேட்டான். அதற்கு குரு, இறைவனுடைய கருணை இருப்பின் எதுதான் முடியாது? ஆயிரம் ஆண்டுகள் இருள் மண்டிக் கிடக்கும் ஓர் அறைக்குள் வெளிச்சத்தைக் கொண்டு வந்தால், அது இருளைக் கொஞ்சம் கொஞ்சமாகவா அகற்றும்? கணப்பொழுதில் அந்த அறையை ஒளிமயமாக்கிவிடாதா? ஆழ்ந்த ஏக்கத்துடன் ஒருவன் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். உண்மையான ஏக்கம் ஒருவனிடம் இருந்தால் இறைவனை ஒரே பிறவியில் அடையலாம்! என்றார்.
|
|
|
|