Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » எல்லாம் அவன் செயல்!
 
பக்தி கதைகள்
எல்லாம் அவன் செயல்!

சித்தார்த்தன் என்ற அந்தக் குழந்தை பிறக்கும் போதே பல அதிசயங்கள் நிகழ்த்தப் போகிறான் என ஜோதிடர்கள் எச்சரித்தார்கள். இந்தக் குழந்தையின் ஜாதகம், அதி அற்புதமானது. ஒன்று, இந்த உலகத்தையே ஆளும் சக்ரவர்த்தியாகத் திகழ்வான் அல்லது இந்த உலகத்தையே மாற்றி எழுதப்போகும் சன்னியாசியாக மாறுவான். தந்தைக்கு எப்படி இருக்கும்? இல்லை... இல்லை... என் செல்ல மகன், என்னைப் போல் சக்ரவர்த்தியாகத்தான் திகழவேண்டும். அதற்கு என்ன பரிகாரம்? என்று கெஞ்சினான் தந்தை. ஜோதிடர்கள் பதில் சொன்னார்கள். பிச்சைக்காரனோ, கிழவனோ, பிணமோ <உங்கள் குழந்தையின் கண்ணில் படாமல் வளருங்கள். அப்படிப்பட்டவர்களை எப்போது உங்கள் மகன் பார்க்கிறானோ, அந்த விநாடியே துறவறம் பூண்டுவிடுவான். ஜாக்கிரதை! என்று எச்சரித்தார்கள்.

மகாராஜாவான தந்தை உடனடியாய் அதற்கான ஆணைகளைப் பிறப்பித்தான். பிச்சைக்காரர்களுக்கெல்லாம் பொருள் கொடுத்து வறுமையைப் போக்கினான். முதியவர்கள் வீட்டைவிட்டு வெளியில் வர தடை விதித்தான். யாராவது இறந்துபோனால், நள்ளிரவில் ரகசியமாய் சவ அடக்கம் செய்ய உத்தரவிட்டான். மன்னனின் ஆணையாயிற்றே, எல்லாம் நல்லபடியாகவே நடந்தன. ஆனால் மூன்று பேர் மட்டும் கவலைப்பட்டார்கள். பிரம்மா, விஷ்ணு, சிவன்! ஏன்? மாபெரும் ஞானி ஒருவர் பூவுலகிற்குக் கிடைக்காமல் போய்விடுவார்களே என்ற கவலைதான். மூவரும் திட்டம் போட்டார்கள். பிரம்மா, பிச்சைக்காரர் போல் சித்தார்த்தன் முன்னால் நின்றார். விஷ்ணு முதியவராக மாறித் தள்ளாட்டம் காட்டினார். சிவன் பிணம் போல் நடித்து அந்த விநாடியே சித்தார்த்தனை துறவியாக்கினார். சித்தார்த்தன், புத்தனானான். இந்தக் கதையின் மூலம் பிச்சைக்காரன் போல் நமக்கு வறுமை ஏற்படலாம். முதுமையும், இறப்பும் அனைவருக்கும் நிச்சயிக்கப்பட்ட ஒன்று. எதற்கும் அஞ்சாமல் இவை அனைத்தும் நம்மைப் படைத்த கடவுளின் திருவிளையாடலே என்பதை உணருங்கள். அவரவர் பணியை செவ்வனே செய்து பயன் பெறுங்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar