Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » புத்திசாலி மருமகள் !
 
பக்தி கதைகள்
புத்திசாலி மருமகள் !

ஒரு நாட்டில் அரசன் ஒருவனுக்கு இளவரசன் ஒருவன் இருந்தான். அவன் சகல கலாவல்லவன்; அழகன். அவனுக்குப் பெண் தரப் பல தேசங்களிலிருந்து பெண்ணைப் பெற்றவர்கள் முன் வந்தனர். ஆனால் அரசன் தான் கேட்கும் நான்கு கேள்விகளுக்கும் சரியான பதில் கூறும் பெண்ணே தன் மருமகளாக வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தான். அரசகுமாரிகள், மந்திரிகுமாரிகள் என எவரும் ஏற்ற பதில் கூறவில்லை! ஒரு நாள் அரசன் முன்பு பால்காரி ஒருத்தி வந்து வணங்கி, பிரபு! உங்கள் கேள்விக்குப் பதில் கூறப் பதவி, பணம், அந்தஸ்து இவை அவசியமா? என்று கேட்டாள். அரசன் அவளது துணிச்சலை ரசித்து, இல்லை என்றான். சரி, நாளை சபைக்கு வருகிறேன் என்றாள். அவ்வாறே மறுநாள் வந்தாள்! அவளிடம் முதல் கேள்வி கேட்கப்பட்டது:

நிரந்தரமாகக் கரைவது எது?

அவளது பதில்: ஆயுள்! நாம் பிறந்த கணத்திலிருந்து நம் ஆயுள் கரைய ஆரம்பிக்கிறது. வளர்ச்சி இதன் இன்னொரு முகம். பிறகு இறங்குமுகமாகிறது! ஓர் உடலில் கரைந்து போன ஆயுள் திரும்பி வராது என்றாள் அரசன் மகிழ்ந்தான்.

இரண்டாம் கேள்வி: நிரந்தரமாக வளருவது எது?

பெண்: பசி! வயிற்றுப் பசி ஒன்றேயல்ல, பணம், சுகம் அதிகாரம்-இப்படிப் பல லௌகிக ஆசைகளின் பசி வளர்ந்து கொண்டிருக்கும்; இவற்றுக்கு முடிவில்லை. அதுபோல் ஆன்மிகப் பசியும் உண்டு. அதற்கு முடிவு இருக்கிறது.

ஒருமுறை ஆத்மாவின், நிஜ ஸவ்ரூபத்தின் தரிசனம் ஆகிவிட்டால் பாரமார்த்திகப் பசி மாயமாகிவிடும்! ஆன்மிகப் பசி தனாத்மகம்(வளர்வது); இது ஆன்மாவின் நிரந்தர வளர்ச்சிக்கு அடிகோலுகிறது. முதலில் கூறிய ஆசைகள் ரிணாத்மகம்(தேய்வது) அந்தமில்லா இந்தப் பசி ஆன்மாவை வீழ்த்துகிறது!

கேள்வி: கறந்துகொண்டே இருந்தாலும் வளர்வது எது?

பெண் புன்னகைத்து, பிரபு! அது இந்தப் பிரபஞ்சம். ஒவ்வொரு வினாடியும் சராசர வஸ்துக்கள் கோடிக்கணக்கில் நசித்துப் போய்க் கொண்டிருக்கின்றன. அதேபோல் புதிது புதிதாகப் பிறந்து கொண்டும் இருக்கின்றன. இப்படி பிறப்பு இறப்புக்களின் சுழற்சியிலேயே உலகம் இருக்கிறது. ஞானி இதிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும்.

அரசனுக்கு அளவில்லாத சந்தோஷம்

கடைசிக் கேள்வி இது: எது வளர்வதும் இல்லை, இறப்பதும் இல்லை, பிறப்பதும் இல்லை? என்று கேட்டான்.

அவள், அது ஜீவ சைதன்யம். அது முன்பும் இருந்தது, இப்போதும் <உள்ளது, இனிமேலும் இருக்கும். வளராது, மரண மடையாது. நித்ய நவீனம். இதை உணர்ந்தவனுக்கு இவ்வுலகம் ஒரு கர்மபூமி மட்டும், வளர்வது, அழிவது இவனைப் பாதிக்காது. அத்தகையவனே அரசனாகவும், மற்றவர்க்கு வழிகாட்டும் குருவாகவும் உள்ள தகுதிஉடையவன் இவன் நடத்தை எல்லோருக்கும் முன்மாதிரியாகும்! என்று கூறினாள்.

அரசன் அவளை ஆசீர்வதித்து, நீயே என் மருமகள்! மன்னன் லௌகிகக் கடமையிலும் ஆன்மிகத்திலும் நிலைத்திருக்க வேண்டும். அதுவே அரச தர்மம். இதற்காக ஆன்மிகத்தை அறிந்தவளே என் மகனுக்குத் தகுந்தவள் என எண்ணினேன். நீ கிடைத்தாய் இருவரும் பல்லாண்டுகள் வாழ்ந்து நம் நாட்டைச் செம்மையாக ஆளுங்கள்! என வாழ்த்தினான்.

ராஜகுமாரன் வெளி விஷயங்களையும், பால்காரி அந்தரங்கத்தையும் குறிக்கிறார்கள். இந்த இரண்டும் சரியான விகிதத்தில் இருப்பதே நல்வாழ்க்கைக்கு அடிப்படை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar