|
மகிழ்ச்சியால் துள்ளுவதும், துன்பம் வந்தால் துவளுவதும் மனித இயல்பு. இன்பம் துன்பம் இரண்டுமே கடவுளின் பிரசாதம் என்பர். எந்த துன்பத்தையும் பகவானின் தூய்மையான பக்தியின் மூலம் கடக்க முடியும் என்ற <உண்மையை ஒரு நிகழ்ச்சியின் மூலம் ஒரு பக்தைக்கு உணர்த்தினார் புட்டபர்த்தி சாய்பாபா. ஒருசமயம் பரமபக்தைக்கு புற்றுநோய் வந்தது. நோயின் வலியை தாங்க முடியவில்லை. பாபாவிடம் சென்று, ""சுவாமி! பாருங்கள் என் வேதனையை! நிச்சயம் நீங்கள் அறிவீர்கள். என்னைக் குணப்படுத்துங்கள், என்று மன்றாடினாள். பாபா அவள் கூறுவதை அமைதியாக கேட்டார். பின் அவளிடம், ""நீ படும் வேதனையை நான் அறிவேன், அது மட்டுமல்ல, உன் புற்றுநோயை என்னால் குணப் படுத்த முடியும். ஆனால், அதற்கு முன் என் கேள்விக்குப் பதில் சொல், என்றார். அவளும், ""சொல்லுங்கள் பாபா, நோய் தீர நீங்கள் கூறும் எதையும் நான் செய்யத் தயாராக இருக்கிறேன், என்றாள். ""உன் பூர்வஜென்ம கர்ம பலனின் விளைவாக இந்த வியாதி வந்துள்ளது. இதை என்னால் குணப்படுத்தி விட முடியும். ஆனால், அடுத்த பிறவியில் இதை அனுபவித்தே ஆக வேண்டும். கர்மபலனில் இருந்து யாராலும் தப்பிக்க முடியாது. கர்ம வினையை இப்போது தீர்த்து விடுகிறாயா? அல்லது அடுத்த பிறவியில் தீர்த்துக்கொள்கிறாயா? என்று கேட்டார். அதற்கு அவள், ""இந்தப் பிறவியில் நான் உங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். உங்கள் நினைவிலேயே வலியை தாங்கும் சக்தியைப் பெற்று விடுவேன், எனவே என் கேன்சரை கேன்சல் செய்ய வேண்டாம், என்று தீர்மானமாக சொன்னாள். பாபாவும், அவளுக்குப் பரிவுடன் ஆறுதல் கூறி அனுப்பினார்.
|
|
|
|