Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » எழுதியது அவனல்லவா!
 
பக்தி கதைகள்
எழுதியது அவனல்லவா!

பூரி அருகிலுள்ள கிந்து பில்வம் கிராமத்தில் தேவசர்மா என்ற பக்தர் வாழ்ந்தார். நீண்டநாளாக குழந்தையில்லாமல் வருந்திய அவர், பூரி ஜெகந்நாதரிடம் ""பிரபோ! எனக்கு குழந்தை பிறந்தால் அக்குழந்தையை உமக்கே அர்ப்பணிக்கிறேன், என்று வேண்டிக்கொண்டார். சர்மாவின் நம்பிக்கை  வீண்போகவில்லை. மனைவி கருவுற்றாள். அழகான பெண்குழந்தை பிறந்தது. "பத்மாவதி என்று பெயரிட்டனர். அவள் வளர்ந்து திருண வ யதை அடைந்தாள். கொடுத்த வாக்குப்படி, அவளை உரிய இடத்தில் சேர்க்க முடிவெடுத்தார். ஆடை, ஆபரணங் களால் அலங்கரிக்கச் செய்து மகளை ஜெகந்நாதர் சந்நிதியில் விட்டு வீட்டுக்குத் திரும்பினார். அன்றிரவு பூரிஜெகந்நாதர் கோயில் அர்ச்சகர் கனவில் தோன்றிய இறைவன், ""இந்த கிராமத்தில் ஜயதேவர் என்ற பக்தர் இருக்கிறார். கணப்பொழுதும் என்னை மறவாதவர் அவர். அவருக்கு தேவசர்மாவின் மகளான பத்மாவதியை மணம் செய்து கொடுங்கள், என்று கட்டளையிட்டார். தான் கண்ட கனவை அர்ச்சகர் தேவசர்மாவிடம் எடுத்துக் கூற ஜயதேவரிடம் பத்மாவதியை அழைத்துச் சென்றனர். ""பத்மா! ஜயதேவரே உன் கணவர். இனிமேல் இந்த குடிசை தான் உனது இருப்பிடம். கணவருக்கு ஏற்ற நல்ல மனைவியாக வாழவேண்டியது உன் பொறுப்பு, என்று சொல்லி ஜயதேவரிடம் ஒப்படைத்தார்.  ஜயதேவர் பத்மாவதியிடம், ""நான் பரமஏழை. கிருஷ்ணரிடம் பக்தி செய்வது மட்டும் தான் என் விருப்பம், என்றார். அவளோ திடமனதுடன், ""சுவாமி! உங்களுக்குப் பணிவிடை செய்து என் காலத்தைக் கழிப்பேன். இறைவனே நீங்கள் தான் என் கணவர் என்று காட்டிய பின் நான் எங்கு செல்லமுடியும்?. என்றாள் உறுதியாக. ""முன் ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால் தான் பத்மாவதி தனக்கு கிடைத்திருக்கிறாள் என்ற எண்ணம் ஜயதேவருக்குள் எழுந்தது.  

கிருஷ்ணரின் கல்யாண குணங்களைப் பாடியும் ஆடியும் இருவரும் கருத்தொருமித்த தம்பதியராக வாழ்ந்தனர். தினமும் பூஜை முடிந்ததும் ஜயதேவர், "கீதகோவிந்தம் என்ற பாடலை இயற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் கற்பனைக்குதிரை ஓடிக் கொண்டிருந்தது. ""கிருஷ்ணருக்கு ராதாவின் மீது கொண்ட காதல் விஷம் போல தலைக்கேறி விட்டது. பூந்தளிர் போன்ற ராதையின் கால்களை கிருஷ்ண ரின்தலையில் வைத்தால் தான் அந்த விஷம் கொஞ்சம் கீழிறங்கும், என்று எழுத நினைத்தார். ஆனால், எழுதமுடியாமல் கை நடுங்கியது. பிறகு  எழுதிக் கொள்ளலாம் என்று எண்ணி மனைவியிடம் ஓலைச்சுவடியைக் கொடுத்து விட்டு நீராடப் புறப்பட்டார்.நீராடி கிருஷ்ணருக்கு பூஜை  செய்தார். உணவு உண்டு ஓய்வெடுத்தார். மீண்டும் சுவடிகளை கையில் எடுத்தார். அவர் எழுத நினைத்த அதே வரிகள் அதில் இடம் பெற்று இருந்தன. ""பத்மாவதி! நான் வேண்டாம் என நினைத்தவரிகளை யார் இதில் எழுதியது? என்று கோபமாகக் கேட்டார். ""நீங்கள் தானே இதில்  எழுதினீர்கள். உங்களின் எழுத்து தானே இது! என்று பத்மாவதி சுட்டிக் காட்டினாள். ஆம்.. ஐயதேவர் நீராடச் சென்று இருந்த நேரத்தில், அவ ரது வடிவில் வந்த கிருஷ்ணனே இதை எழுதிச்சென்றார் என்று உணர்ந்து கொண்டார். ""கிருஷ்ணா! ராதையின் பாதங்களை தலை மீது வைத்துக்  கொள்வதில் அவ்வளவு ஆனந்தமா உனக்கு! என்று பரவசம் கொண்டார். ஜயதேவரும், பத்மாவதியும் கீதகோவிந்தப் பாடல்களைப் பாடியே படி கிருஷ்ணரின் முன் ஆனந்தக் கூத்தாடினர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar