Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நேர்மையான பேஷ்வா
 
பக்தி கதைகள்
நேர்மையான பேஷ்வா

பேஷ்வாக்களின் தலைநகராகிய புனே நகரில் ஆண்டுதோறும் சிராவண மாதத்தில் நாடு தழுவிய பண்டிதர்களின் மாநாடு நடைபெறும். பேஷ்வா நானா பட்னாவிஷ் காலத்தில் நடந்த நிகழ்ச்சி இது. ராஜ்யத்தின் தலைமை நீதிபதி ஸ்ரீராமசாஸ்திரி. சபையில் தங்களது திறமைகள் வெளிப்படுத்தும் அறிஞர்கள், கலைஞர்களின் தகுதிக்கேற்ற சன்மானத்தை நிர்ணயிப்பவர் இவரே. அந்த வருடம் பெரும் எண்ணிக்கையில் சபை கூடியிருந்தது. அறிஞர்களும் கலைஞர்களும் தமது கலைகளை நிகழ்த்திக் காட்டினர். அவர்களது தகுதிக்கேற்ப ராமசாஸ்திரி பணமுடிப்புகளை எடுத்துத் தர, பேஷ்வா அவற்றை விற்பன்னர்களுக்கு வழங்கிக் கவுரவித்தார். திடீரென்று பார்வையாளர் வரிசையிலிருந்து மெலிந்த முதியவர் ஒருவர் அறிஞர்களுக்கான இருக்கையில் வந்தமர்ந்தார். வந்தவர் எந்தவிதத் திறமையையும் வெளிப்படுத்தவில்லை. வெறுமனே அமர்ந்திருந்த அந்த முதியவரைப் பார்த்ததும் ராமசாஸ்திரி தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார். வழக்கத்துக்கு மாறான இந்த நிகழ்ச்சி அனைவருக்கும் வியப்பாக இருந்தது. கடைசியில் பேஷ்வாவே ஒரு முடிவுக்கு வந்து நாணயத்தட்டிலிருந்து இருபது தங்கக் காசுகளை எடுத்து ராமசாஸ்திரியின் கையில் தந்து அந்த முதியவரிடம் அளிக்கச் சொன்னார். ராமசாஸ்திரி அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு, அதில் இரண்டு காசுகளை மட்டும் எடுத்து பேஷ்வாவின் கையில் கொடுத்தார்; அதை மட்டும் அந்த முதியவருக்கு வழங்குமாறு வேண்டிக் கொண்டார்.

பரவாயில்லை இருபது காசுகளையும் கொடுத்து விடுங்கள் என்று பேஷ்வா பெருந்தன்மையுடன் கூற, வேண்டாம் அரசே!  இரண்டு காசுகளே போதும் என்று பிடிவாதமாக சாஸ்திரி கூறவும். ஒருவித உறுத்தலுடன் இரண்டு காசுகளை மட்டும் முதியவரிடம் கொடுத்தார் பேஷ்வா. சபை முடிந்து, ராமசாஸ்திரி தன் வீட்டுக்குள் நுழைந்ததும் எல்லோரது முகங்களிலும் கவலை தோய்ந்திருப்பதைக் கவனித்தார். வீட்டின் நடுக்கூடத்தில் அனைவரும் கூடியிருந்தனர். நடுவில் உள்ள பெஞ்சில் சாஸ்திரியின் மூத்த சகோதரர் தலையைத் தொங்கப் போட்டவாறு அமர்ந்திருந்தார். சாஸ்திரி நேராகத் தன் தமையனார் முன் சென்று வீழ்ந்து வணங்கினார். பின்னர் எழுந்து கைகூப்பிவாறே கூறினார். சபைக்கு வருமளவுக்கு அப்படி என்ன அவசியம் ஏற்பட்டது? உங்களுக்கு ஏற்பட்ட அவமானம் நம் குடும்பத்துக்கு ஏற்பட்டதல்லவா? நான் உங்கள் தாசன். இதோ இங்கு இருப்பவர்கள் உங்களது பணியாட்கள் . நீங்கள் எப்போதும் போல் உங்களுக்கு வேண்டியதைச் சந்தோஷமாகப் பெற்றுக்கொண்டு ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்று ஜபித்துக் கொண்டே இருங்கள்.

மறுநாள் காலையில் தம்மைச் சந்திக்க வந்த ராமசாஸ்திரியைக் கண்டதும் பேஷ்வா வியந்து என்ன சாஸ்திரியாரே! நேற்று ஏன் அப்படி நடந்து கொண்டீர்கள்? என வினவினார். பேஷ்வா அவர்களே, நேற்று தங்களிடம் பரிசு பெற வந்த முதியவர் வேறு யாருமில்லை. என் தமையனார்தான் அதிகம் படிப்பறிவில்லாதவர். எல்லோருக்கும் மன்னர் பரிசு தருகிறார், தானும் சன்மானம் பெறலாம் என வந்துவிட்டார். நான் அவருக்கு வீட்டில் தினமும் பாதபூஜை செய்கிறேன். இருந்தாலும், கற்றறிந்தோர் சபையில் எந்த விதத் தகுதியும் இல்லாத ஒருவருக்குத் தாங்கள் பரிசளிப்பதை என்னால் ஏற்க முடியவில்லை என்று கண்ணீர் மல்கக் கூறினார் ராமசாஸ்திரி. ஆஹா! நம் நாட்டின் விலை மதிப்பில்லாத ரத்தினம் தாங்கள்! உங்களைப் போன்ற ஒருவரை  நீதிபதியாகப் பெற்றதற்காக இந்த நாடே பெருமைப்படுகிறது என்று கூறிப் புளகாங்கிதமடைந்தார் பேஷ்வா.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar