|
ஞானி ஒருவர் பிரசங்கம் ஒன்றில் பேசும் போது, வாழ்க்கையில் மிகவும் நொடிந்து போனவர்களையே கடவுள் நேசிப்பார் என்று கூறினார். ஆனால் வறியவர்களைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே என அவரிடம் கேட்டார் ஒருவர். குடிசை ஒன்றுக்குள் நுழைந்த ஞானி, அங்கிருந்த குழந்தையிடம், உனக்குப் பிடித்தமான பொம்மையை எடுத்து வா பாப்பா..! என்றார். குழந்தை ஒரு உடைந்த பொம்மையை எடுத்து வந்து காட்டியது. ஏன் இதை உனக்குப் பிடிக்கும்? கேட்டார் ஞானி. இவ்வளவு உடைந்துபோயிருக்கும் இதனை நான் நேசிக்காவிட்டால் வேறு யார் இதை நேசிப்பர்..! குழந்தை சொன்னதே பாடமானது எல்லோருக்கும்.
|
|
|
|