|
மகான் ஒருவரிடம் செல்வந்தர் ஒருவர் தன் மகன் ஊதாரியாக இருப்பதை சொல்லி வருந்தினார். அவனைத் திருத்தும்படி வேண்டினார். பணக்காரரின் மகனை அழைத்த மகான், பெரிய பாறாங்கல் ஒன்றைக் காட்டி, அதனை பக்கத்திலிருந்த மலைக்குத் தூக்கி வருமாறு சொன்னார். அவனும் மிகுந்த சிரமப்பட்டு அந்தப் பாறையைச் சுமந்து வந்தான். மலை உச்சிக்கு வந்ததும் அந்தக் கல்லைக் கீழே உருட்டிவிடு என்றார். அவன் கோபத்தோடு அவரைப் பார்க்க, மகான் உன் தந்தை செல்வம் சேர்த்ததும் இப்படித்தான்... அதனை ஊதாரித்தனமாக உருட்டிவிடுவது என்ன நியாயம்? என்று அமைதியாக கூற அவன் திருந்தினான். மகிழ்ந்தார் செல்வந்தர். |
|
|
|