|
புகழ்பெற்ற மன்னன் ஒருவன் அண்டை நாட்டின்மீது படையெடுக்க ஆயத்தமானான். அச்சமயம் அங்கு வந்த ஞானி ஒருவர் மன்னனின் பயணத்தைப் பற்றி விசாரித்தார். கலிங்கத்தை ஜெயிப்பதுதான் என் முதல் வேலை! என்றான் மன்னன். அதன் பிறகு? என்றார் ஞானி. அடுத்தது மகதம் என் கைக்குள் வர வேண்டும்! என்றான் மன்னன் அப்புறம் ? என்று தொடர்ந்து கேட்டார் ஞானி விதேகம், மாளவம், காந்தாரம் என எல்லா தேசங்களின் மீதும் படையெடுத்து வெல்வேன்! சரி, எல்லா நாடுகளையும் ஜெயித்தபின் என்ன செய்யப் போகிறாய்? மீதியுள்ள நாட்களை அமைதியாகவும், இன்பமாகவும் கழிப்பேன்! என்றான் மன்னன் மன்னா! கடைசியில் செய்யப் போகும் அந்தக் காரியத்தை இப்போதே ஏன் செய்யக்கூடாது? என்றார் ஞானி. மன்னனால் பதில் தர முடியவில்லை! |
|
|
|