|
சீடன் ஒருவன் குருவிடம் கேட்டான், சுவாமி உலகில் தோன்றும் உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பதாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறு திரும்பத் திரும்பப் பிறப்பதைத் தவிர்க்க முடியுமா? குரு எழுந்து சென்று ஒரு பிடி நெல்லை எடுத்தார். அதை வாணலியில் போட்டு, வறுத்தெடுத்தார். பின்னர் அதை சீடனிடம் கொடுத்து, இதை வயலில் விதைத்து விட்டு வா! என்றார். உடனே சீடன் பணிவோடு, சுவாமி! வறுத்த நெல் முளைக்காது என்பது நீங்கள் அறியாததா? எனக் கேட்டான். நெல்லில் இருக்கும் ஈரப்பதத்தை வறுத்து அகற்றியது போல் பிறருக்காக வாழ்ந்தே நம்முடன் பிணைந்திருக்கும் ஆசையை நீக்கினால், இறைவனுடன் ஒன்றி விடலாம். பின் பிறக்க வேண்டிய அவசியமிருக்காது! என்றார்.
|
|
|
|