Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வீரத்தாய்
 
பக்தி கதைகள்
வீரத்தாய்

13- ஆம் நூற்றாண்டில் ஆசியாவில் தைமூர் என்ற இரக்கமற்ற மன்னன் கொடுங்கோல் ஆட்சி செய்துவந்தான். சொந்த வாழ்வில் நிம்மதியற்ற தைமூர் உலகையே அழித்துவிடத் தீர்மானித்தான். 33 ஆண்டுகள் அழிவுப் பேயாட்டம் ஆடினான். ஒருமுறை தைமூரும் அவன் படைகளும் ரோஜாப் பள்ளத்தாக்கில் முகாமிட்டனர். அந்தப் பகுதி மலர்களின் அன்பு என்று கவிஞர்களால் அழைக்கப்பட்டது. 15 ஆயிரம் பாசறைகள் பள்ளத்தாக்கில் நிறுவப்பட்டன: நடுவில் அரசன் தைமூரின் பாசறை, அவனைச் சுற்றிலும் அரசர்கள். நடுவில் கவி கிர்மானி! அவர் எப்போதும் உண்மையே பேசுவார். அனைவரும் தைமூரைக் கண்டு பயந்து நடுங்கினர். கவி மட்டும் பயப்படுவதில்லை. அன்று எல்லோரும் கவிஞனின் கவிதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தபோது பெண் ஒருத்தி கூச்சலிடும் ஒலி கேட்டது. சேவகர்கள் உள்ளே வந்து, அரசே, உங்களைத் தேடி ஓர் ஏழைப் பெண் வந்திருக்கிறாள் என்று அறிவித்தனர். அழைத்து வாருங்கள் என உத்தரவிட்டான் தைமூர். அப்பெண்மணி தைரியமாகத் தைமூரை அணுகி, அரசே, எனக்கு ஓர் அருமையான மகன் இருந்தான். எங்கள் நாட்டை நீங்கள் முற்றுகையிட்டபோது அவனுக்கு ஆறு வயது. உங்கள் படை எங்கள் நிரபராதி மக்களைக் கொன்று குவித்தது; என் மகனைக் கடத்திச் சென்றது. அரசே, நீங்கள் எங்களை வென்று எங்கள் உடமைகளை எல்லாம் உங்களுடையதாக்கிக் கொண்டீர்கள். என் மகன் எங்கிருக்கிறான் என்பதை நீங்கள் கண்டிப்பாக அறிவீர்கள்.

நான் பல காலம் மலைகளையும், காடுகளையும், பாலைவனங்களையும் கடந்து வந்தேன். வழியில் அச்சுறுத்திய துஷ்டமிருகங்களிடம் பிள்ளையைத் தேடி வரும் தாய் நான் என்றதுமே அவை விலகி வழிவிட்டன. எனக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை. ஏனெனில் மிருகங்களுக்கும்கூட அம்மாக்கள் உண்டு! அன்னை இல்லாவிட்டால் கவிஞர்கள் ஏது, வீரர்கள் ஏது? பெண்களே இல்லாத உலகில் அன்பும் இல்லை; அன்பில்லாத உலகில் மகிழ்ச்சி எப்படி வரும்? அப்படிப்பட்ட தாயான நான் அரசே, என் மகனைத் திருப்பித் தாருங்கள் என்று கேட்கிறேன்! என்றாள். தைமூர் கோபமாக, பெண்ணே, நீ யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் தெரியுமா? என்று கேட்டான். துயரத்தின் உச்சியிலிருந்த அவளோ, மன்னா, நீ வெறும் மனிதன்; உயிர்களைப் பறித்து யமனுக்கு ஊழியம் செய்பவன். நானோ ஒரு தாய்! உயிரைப் படைக்கவல்லவள். ஆகையால் நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்! என் பிள்ளையைத் திருப்பித் தா! என முழங்கினாள்.

அதிசயம்! தைமூர் அப்படியே அடங்கிவிட்டான். சற்று நேரம் மவுனமாக இருந்தான். அந்தத் தாயின் வார்த்தைகள் ஒரு புதிய கோணத்தை அவனுக்கு உணர்த்தின. அவனது மனம் மாறிற்று. தைமூர், பல காலமாக நான் மனிதர்களை அழித்து வந்தேன்; லட்சக்கணக்கான மரணங்களைப் பார்த்துவிட்டேன். எனக்கும் ஒரு மகன் இருந்தான்; ஆனால் அவனை மரணம் கவர்ந்து போய்விட்டது. என் பகைவர்கள் தங்கள் நாட்டிற்காக, உடைமைகளுக்காகவே போராடினர்; யாரும் மக்களுக்காகப் போராடவில்லை. என் வாழ்நாளில் முதல் முறையாக இதோ, இந்தப் பெண்மணி தன் அன்பு மகனுக்காகப் போராடுகிறாள். பிறரிடமும் காணாத துணிவு இவளிடம் இருப்பதன் ரகசியம் இவள் உள்ளத்தில் பொங்கும் அன்புதான். நான் மகனை நேசித்த அளவே இவளும் நேசிக்கிறாள்! ஆனால் இவளது அன்பு ஆக்கப்பூர்வமானது. எனது அன்பு முட்டாள்தனமானது என்று கூறித் தன் பணியாட்களிடம் அவளது மகனை அவளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar