|
சிறுவன் செல்வனுக்கு அன்று வயது 15. அம்மா காலையிலேயே அவனை எழுப்பி பிறந்த நாள் வாழ்த்து கூறினாள். அம்மாவுக்கு நன்றி சொன்ன அவன், காலையிலேயே தான் அன்றாடம் விளையாடும் கத்தியை எடுத்து தீட்ட ஆரம்பித்தான். ""செல்வா! கத்தியைத் தீட்டும் வழக்கத்தை விடு என்று எவ்வளவோ சொல்கிறேன். பிறந்த நாளன்று கூடவா இதைத் தொட வேண்டும்,. ""அம்மா பதறாதே! பிறந்தநாள் என்பதற்காக அன்றாடம் பெறும் பயிற்சியை நிறுத்த முடியாது. இந்த கத்தி என்னவோ, நம்மை ஒருநாள் காப்பாற்றுமென என் உள்ளத்திற்கு படுகிறது, என்றான். சிறுவனாய் இருந்தாலும், விபரமாய் பேசினான். "ஐந்து வயதில் ஆரம்பித்த கத்தி தீட்டும் பழக்கம், அதை அப்படியும் இப்படியுமாய் ஆட்டி சண்டை போடுவது போல் நடிப்பது...இது செல்வனுக்கு பழகிப் போன விஷயம். அன்று, மன்னர் படைகளுடன் ஊருக்குள் புகுந்தார். வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடினார். தர மறுத்தவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆண், பெண், குழந்தைகளின் மரண ஓலம் எங்கும் கேட்டது. செல்வனின் வீட்டுக்குள்ளும் மன்னர் புகுந்தார். ""வெளியே ஓடி விடுங்கள், இல்லாவிட்டால் கொன்று விடுவேன், என்று மிரட்டினார். செல்வன் கலங்கவில்லை. ""மன்னா! முடிந்தால் அதைச் செய் பார்க்கலாம். நீ பெரிய வாள் வைத்திருக்கிறாய். அதே போல இன்னொரு வாளை என்னிடம் கொடு. சண்டை யிடுவோம். நீ தோற்றால் எனக்கு அடிமை, என்று கர்ஜித்தான். மன்னன் ஆர்ப்பாட்டமாக சிரித்தான். ""என்னையே எதிர்த்துப் பேசும் அளவு துணிச்சலா! உன்னை என்ன செய்கிறேன் பார், என வாளை உருவினார். பாய்ந்தான் செல்வன். அடுத்த கணம் அந்த வாள் அவனது கையில் இருந்தது. ""மன்னா! பயப்படாதே! இங்கே நிற்கும் உன் வீரனின் வாளை வாங்கிக் கொள். வா.. சண்டையிடலாம், என்றான். அந்த கொடுங்கோல் மன்னனின் மனமே மாறிவிட்டது. ""சிறுவா! நீ இவ்வளவு தைரியசாலியா! நீ சொன்னது போல், உனக்கு நான் அடிமையாகிறேன். இனி, நீயே இந்நாட்டு மன்னன்,. மன்னன் போய்விட்டான். மணிமுடி தரித்து மன்னனாய் அமர்ந்த தன் மகனைப் பார்த்து தாய் பெருமைப்பட்டாள். குழந்தைகளை தைரியமாய் வளர்வதை தடுக்கக்கூடாது என்பதைப் புரிந்து கொண்டாள். |
|
|
|