|
எதைச் செய்தாலும் ஏதாவது ஒரு தடை வந்துவிடுகிறது. என்னதான் செய்வது? ஞானி ஒருவரிடம் கேட்டான் ஓர் இளைஞன். அவனை ஓர் எறும்புப் புற்றின் அருகே அழைத்துச் சென்ற ஞானி கூர்ந்து கவனிக்கச் சொன்னார். ஓர் எறும்பு, தன் உடலைவிட நீளமான அரிசி ஒன்றை கஷ்டப்பட்டுத் தூக்கிச் சென்று கொண்டிருந்தது வழியில் ஒரு சிறு விரிசல் இருந்தது. அதனைக் கடந்து செல்ல இயலாதபடி அரிசி தடையாக இருந்தது. சில நிமிடம் யோசித்த எறும்பு, தான் சுமந்து சென்ற அரிசியையே பாலம்போல் வைத்து அதன்மேல் ஏறி மறுபுறம் சென்று அரிசியை இழுத்துச் சென்றது. இளைஞனைத் திரும்பிப் பார்த்தார் ஞானி. துன்பங்களையே பாலமாக வைத்துக் கடந்து செல்ல வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டதாகச் சொல்லி மகிழ்வுடன் விடைபெற்றான் இளைஞன். |
|
|
|