|
கடற்கரையில் நின்றுகொண்டிருந்த ஒரு ஞானி, அலைகளால் தள்ளப்பட்டு கரையில் தத்தளித்த மீன்களை எடுத்து கடலுக்குள் விட்டுக் கொண்டிருந்தார் அங்கிருந்த ஓர் இளைஞன், அய்யா, இவ்வளவு பெரிய கடலின் கரை எங்கும் இப்படி மீன்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும். எல்லாவற்றையும் உங்களால் காப்பாற்ற முடியுமா? ஏன் இப்படிப் பயனற்ற வேலையைச் செய்கிறீர்கள்? என்று கேட்டான் கரையில் தத்தளித்த மீனைக் கையில் எடுத்த ஞானி, என் செயல் இந்த ஒரு மீனுக்கு உதவுவதாக இருந்தாலும்கூட அது பயனுடையதுதான்.! எனச் சொன்னபடியே அதனை நீரில் விட்டார். மற்றவர் நலனுக்காகச் செய்யப்படும் எதுவும் பயனுள்ள செயலே என்பதை உணர்ந்தான் இளைஞன். |
|
|
|