|
குருகுல போதனை வகுப்பில் ஒருவர், ஒருவன் தர்மத்தை அறிந்துகொள்கிறான். எனக்கு மட்டும்தான் இது தெரியும். யாருக்கும் சொல்லித் தரக்கூடாது என்று நினைத்தால் அது பாவம் ! என்றார். சில சீடர்கள் எழுந்து, குருவே! நீங்கள் சொல்வது விளங்க வில்லையே! என்றனர். அதற்கு குரு, ஆற்றைக் கடக்க ஒருவன் படகு செய்கிறான். அந்தப் படகில் அமர்ந்து மறு கரையை அடைகிறான். நான் செய்த படகு என்று அதை எங்கே சென்றாலும் தூக்கிச் செல்வானா? மற்றவர்க்கும் பயன்பட வேண்டும் என்று அந்தக் கரையிலேயே படகை விட்டுப் போவான். தேவையானவர்கள் அந்தப் படகைப் பயன்படுத்தி ஆற்றைக் கடப்பார்கள். படகைப் போன்றதுதான் தர்மமும். எல்லோருக்கும் பயன்பட வேண்டும் ! என்றார். குருவின் உவமானம் கேட்டு மெய்சிலிர்த்தனர் சீடர்கள். |
|
|
|