|
துறவி ஒருவரை சந்தித்த ஒருவன், சுவாமி! உங்களுக்கு மற்றவர்கள் தரும் எந்தப் பொருளையும் உடனே பிறருக்குத் தந்து விடுகிறீர்களே, நாளைக்கு என்ன செய்வீர்கள்? எனக் கேட்டான். அப்பனே! நாளைய உணவிற்கு என்ன செய்வோம்? உடுத்தும் உடைக்கு என்ன செய்வோம்? என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இருப்பதுதான் உண்மையான துறவின் இலக்கணம்! என்று அமைதியாகச் சொன்னார். ஓர் அறிஞரை சந்தித்த ஒருவன், ஐயா! உண்மையான மனிதன் யார்? என்று கேட்டான். தம்பி ! பணம் எவனுக்கு அடிமையோ அவன்தான் உண்மையான மனிதன் ! என்றார் அறிஞர். |
|
|
|