|
ஞானி ஒருவரிடம், அய்யா ! இறைவன் எங்கும் இருக்கும்போது, கோயில்களுக்குச் சென்று வழிபடுவது ஏன்? எனக் கேட்டான் ஒருவன். பூமியை எங்கே தோண்டினாலும் தண்ணீர் கிடைக்கும். ஆனால் ஏற்கனவே குளம், கிணறு, ஏரி உள்ள இடத்தில் தோண்டும் போது சிரமம் இல்லாமல் நீர் பெறலாம். அது போலத்தான் இறைவன் எங்கும் இருந்தாலும், கோயில்களில் எளிதாக அவரை தியானித்துப் பலன் பெறலாம் ! சொன்னார் ஞானி. தர்மவான் ! உண்மையாகவே தர்மத்தைதக் கடைப்பிடிப்பவர் யார்? சீடர்களைப் பார்த்துக் கேட்டார் ஒரு துறவி. அனைவரும் ஆளுக்கு ஒரு பதிலைச் சொல்லினர். முடிவில் துறவி சொன்னார், மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காக தர்மத்தைக் கடைப்பிடிப்பவனைவிட, நம் செயலை கடவுள் பார்க்கிறார் என்று நம்பி, தனியாக இருக்கும் போதும் எவனொருவன் ஒரு பாவத்தையும் செய்வதில்லையோ அவனே உண்மையான தர்மவான் !
|
|
|
|