Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » துறக்க வேண்டியது!
 
பக்தி கதைகள்
துறக்க வேண்டியது!

துறவி ஒருவரிடம் வந்த மன்னன் ஒருவன், சுவாமி! எனக்கு ஞானியாக ஆசை. உபதேசம் செய்யுங்கள்! என்று வேண்டினான்.
உனக்கு வைராக்கியம் வரவில்லை. அது வந்ததும், வா! என்று சொல்லி அனுப்பினார் ஞானி.
அரசன் உடனே காட்டிற்குச் சென்று ஆசிரமம் அமைத்து, தவம் செய்தான். அங்கு வந்த ஞானி மன்னனிடம், எல்லாவற்றையும் துறந்தாயா? என்று கேட்டார்.
உடனே தான் தங்கியிருந்த ஆசிரமத்தையும் பொருட்களையும் தீயில் இட்டான் அரசன்.
இதெல்லாம் உன் உடமைகள் அல்ல. இயற்கைக்குச் சொந்தமானவை! என்றார் ஞானி.
அப்படியென்றால் என் உடம்பைத் துறக்கிறேன் என்று சொல்லி தீயில் விழப் போனான்.
உடம்பு பஞ்ச பூதங்களுக்குச் சொந்தம்! என்றார் ஞானி.
எனக்கு எது சொந்தம்? என்றான் மன்னன் சற்று எரிச்சலாக.
உன் அகங்காரம்தான் உனக்குச் சொந்தம். துறக்க வேண்டியதும் அதுதான். அது இருப்பதால்தான் உலகமே <உன்னிடம் இருப்பதாக நினைக்கிறாய்! என்று துறவி சொல்ல, தன் தவறை உணர்ந்தான் மன்னன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar