|
குருகுலவாசம் முடிந்து புறப்பட்ட சீடர்களை குரு ஆசீர்வதித்தார். நீதியைக் கடைப்பிடித்து தர்மத்தைக் காத்திடுங்கள் என்று. சீடன் ஒருவன் சந்தேகம் கேட்டான். தர்மத்தைக் கடைப்பிடிக்க நீதியை நழுவ விடலாமா? சீடனே, தர்மம் மாறாதது. நீதி மாறக்கூடியது. அதனால் காத்திட வேண்டியது தர்மத்தைத்தான்! விளங்கவில்லை குருதேவா...! மகனே, ஒருவரைக் கொல்வது அநீதி. அதுவே போர் என வரும்போது யுத்த நீதி ஆகிவிடுகிறது. இப்படித்தான் நீதி இடம், பொருளால் மாறும். ஆனால் தர்மம் எந்த இடத்திலும் மாறாது. ஆகவே தர்மத்தைக் காப்பதே அவசியம்! குரு சொன்னதை உணர்ந்தான் சீடன். |
|
|
|