|
மகான் ஒருவர் எச்சூழ்நிலையிலுமே மரணத்தைப்பற்றி அச்சம் இல்லாதவராக இருந்தார். இதைக் கண்டு வியப்படைந்த அவரது சீடர்கள், சுவாமி! நாங்கள் எல்லோரும் மரணம் வந்துவிடுமோ என்று அஞ்சியபடியே வாழ்கிறோம். ஆனால் நீங்கள் அதற்கு சிறிதும் கவலைப்படுபவராகவே தெரியவில்லையே! இந்த மனநிலைக்கு உங்களை எப்படித் தயார்படுத்திக் கொண்டீர்கள்? என்று கேட்டனர்.
சீடர்களே! நான் முதன்முதலில் மண்ணாகப் பிறந்தேன். இறந்தபின் செடியாகப் பிறந்தேன். அடுத்தது விலங்காகப் பிறந்தேன். இப்பொழுது மனிதனாகப் பிறந்து இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் மரணம் என் நிலையை உயர்த்தி உள்ளது. இப்பொழுது நான் இறந்தால் அடுத்து தேவனாகப் பிறப்பேன். உயர்ந்த நிலைக்குச் செல்லும் நான் மரணம் கண்டு எதற்காக அஞ்சவேண்டும்! என பதில் கேள்வி கேட்க, சீடர்கள் குருவின் பற்றற்ற மனநிலை அறிந்தனர்.
|
|
|
|