|
துறவி ஒருவரிடம் சேருவதற்காக வந்த சீடன், குருவே! பல இடங்கள் சுற்றி அலைந்து திரிந்து வந்திருக்கிறேன் நான். எனது ஆன்மிகத் தேடலுக்கான வழி முறைகளைத் தாங்கள்தான் எனக்குக் கற்றுத் தரவேண்டும்! என்றான்.மற்ற சீடர்களை அழைத்த துறவி, இந்தச் சீடனுக்கு வயிறு நிறைய உணவளித்து உபசரியுங்கள். ஆனால் தண்ணீர் மட்டும் தரவேண்டாம். பிறகு ஒரு அறையில் வைத்து இவரைப் பூட்டி விடுங்கள். கத்தினாலு<ம் தண்ணீர் தர வேண்டாம் என்றார். விடியும் வரை அந்தச்சீடன், தண்ணீர், தண்ணீர் என்று கத்திக் கொண்டேயிருந்தார். மறுநாள் துறவியே சென்று கதவைத் திறந்து அவனுக்கு தண்ணீர் கொடுத்தார். தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட சீடன், ஏன் இப்படிச் செய்தீர்கள்? என்று வருத்தத்தோடு கேட்டான். அதற்குத் துறவி, நேற்றெல்லாம் அறைக்குள்ளே என்ன செய்துகொண்டிருந்தாய்? என்று கேட்டார். அதற்கு அவன், வேறென்ன செய்வது? மயங்கியிருந்த நேரம் தவிர மற்றெல்லா நேரமும் தண்ணீர் கிடைக்குமா? என்ற சிந்தனைதான் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது! என்றான். உண்மைதான்! கடவுள் பற்றிய உனது ஆன்மிகத் தேடலும் இப்படித்தான். ஒரே சிந்தனையோடு இருக்க வேண்டும் என்று உனக்குப் புரிய வேண்டும் என்பதற்காகத் தான் உன்னை அறையிலே பூட்டி வைத்தேன்! என்றார் துறவி.சீடனுக்கு இப்போது உண்மை புரிந்தது. அதன்பின் அவன், மனதை ஒரு நிலைப்படுத்தி கடவுளை தியானிக்கத் தொடங்கினான்.
|
|
|
|