|
மகான் ஒருவனிடம் கல்வி கற்பதற்காக இளைஞன் ஒருவன் வந்தான். அவரை பணிவாக வணங்கிய அவன், உங்களிடம் நான் எப்படி கல்வி கற்க வேண்டும்? சொல்லுங்கள், அப்படியே கற்றுக் கொள்கிறேன்! என்றான். என்னை ஒரு மணியாக நினைத்துக் கொள்! என்றார் அவர். நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லையே! என்றான் இளைஞன். மணியை மெல்ல தட்டினால் மெல்லிய ஓசைதான் கேட்கும். வலிமையாகத் தட்டினால் பேரோசை கேட்கும். தட்டாமலே இருந்தால் ஓசையே கேட்காது! என்றார் மகான். புரிந்துகொண்டான் இளைஞன். |
|
|
|