|
மகான் ஒருவரைச் சந்தித்த இளைஞன் ஒருவன், என்னிடம் கல்வி, திறமை, மேதைத்தனம் எல்லாம் இருக்கிறது. ஆனாலும் வெற்றி பெற முடியவில்லை, ஏன்? என்றான். அதற்கு மகான், பாறையைப் பிளப்பவன் நூறு முறை அடித்தாலும் பாறை உறுதியாக ஒரு விரிசலும் காட்டாமல் இருக்கிறது. 101வது தடவை அடிக்கும்போது இரண்டாகப் பிளந்து விழுகிறது. அந்த 101வது அடிதான் சாதித்தது என்பது இல்லையே! முன்னர் கொடுத்த 100 அடிகளும் தம் பங்கை ஆற்றின அல்லவா! தொடர்முயற்சியே வாழ்க்கையின் வெற்றியைத் தரும். திறமை மட்டும் வெற்றியைத் தந்து விடாது! என்று கூறினார். |
|
|
|