|
ஒரு துறவியிடம் இருந்த பல சீடர்களுள் ஒருவன், குருவே! பற்று, ஆசை, பேராசை இவைகளின் பொருள் என்ன? என்று கேட்டான். சீடனே! தன் பொருள் மேல் உண்டாகும் விருப்பத்திற்கு பற்று என்றும், பிறர் பொருள் மீது உண்டாகும் விருப்பத்திற்கு ஆசை என்றும்; கிடைக்காத பொருள் மீது உண்டாகும் விருப்பத்திற்கு பேராசை! என்றும் பொருளாகும் என்றார் துறவி. |
|
|
|