|
புத்தர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்க, அங்கு வந்த அவரது சீடன், குருவே! நான் இந்த உலகத்தைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். எவ்வளவு காலமாகும்? புத்தர் அவரிடம் இந்த மரத்தில் ஏறி தழைகளைப் பறித்து வா! என்றார். உடனே மரத்தில் ஏறி இரண்டு கைகள் கொள்ளும் அளவுக்குத் தழைகளைப் பறித்துக் கொண்டு வந்தார். இப்போது புத்தர் அவரைப் பார்த்து, இப்போது உன் கையில் எவ்வளவு உள்ளது? என்று கேட்டார். இரண்டு கைகள் நிறைய தழைகள், குருவே! அப்படியானால் மரத்தில்? என்று திருப்பிக் கேட்டார் புத்தர். மரத்தில் ஏராளமாக தழைகள் இருக்கின்றன! சீடன் சொல்ல... இந்த உலகத்தை தெரிந்துகொள்ள வேண்டுமென்று சொன்னாயே, அது இதுதான். எனக்குத் தெரிந்ததும், நான் உனக்குப் போதித்தும், உன் கையிலுள்ள அளவுதான். எனக்குத் தெரியாததும், நான் உனக்குப் போதிக்காததும் மரத்திலு<ள்ள தழைகளின் அளவு. அவ்வளவையும் என்னால் போதிக்க முடியாது. நீ முயன்றால் இந்த <<உலகத்தை உன் அனுபவத்தால் இன்னும் சற்றுகூடத் தெரிந்து கொள்ள முடியும்! தன்னடக்கத்தோடு சொல்லி முடித்தார், புத்தர்! |
|
|
|