|
ஒரு சமயம் குருவை தன் வீட்டிற்கு அழைத்து வந்தான் சீடன். எனக்கு பசியாக உள்ளது. சாப்பாடு போடு! என்று குருவே சீடனிடம் கேட்டார். சீடனின் மனைவி ருசியாக சமைத்து பரிமாறினாள். குரு சாப்பிட்டு முடித்ததும், ஐயனே, திருப்தியாக சாப்பிட்டீர்களா? என சீடன் கேட்க, நான் எங்கே சாப்பிட்டேன்? எவனுக்குப் பசியோ அவன்தான் சாப்பிட்டிருப்பான். அவனுக்குத்தானே திருப்தி ஏற்படும்? என்றார் குரு. சீடன் புரியாமல் விழிக்க, நான், நீ இறைவன் என புறவேறுபாடுகள் இருந்தாலும் அடிப்படையில் அனைத்துள்ளும் இருப்பது பரம்பொருள் ஒன்றே! என சீடனுக்கு அத்வைத உண்மையை விளக்கினார் குரு. |
|
|
|