|
ஒரு துறவியை சந்தித்த ஒருவன், சுவாமி! மனிதனுக்கு அடக்கம் அவசியம் என்று எல்லோரும் சொல்கிறார்களே, எதனால்? என்று கேட்டான். குழம்பில், புளி, காரம் போன்ற அனைத்துப் பொருட்கள் இருந்தாலும் உப்பு இல்லையென்றால் உண்பதற்கு உதவாது. அதுபோல் ஒருமனிதனிடம் செல்வம், பட்டம், பதவி முதலியன இருந்தாலும் அடக்கம் இல்லையென்றால் சிறப்படைய மாட்டான்! என்றார் துறவி. |
|
|
|