|
மகான் ராம கிருஷ்ணரிடம் வந்த ஒருவர், சுவாமி! நான் இதுவரை செய்து வந்த வியாபாரம், எனது சொத்து என அனைத்தையும் என் மகன்களுக்குத் தந்து விட்டு இறைவனையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் எனக்கு தெய்வம் தரிசனம் தரவில்லையே, ஏன்? என்ன வியாபாரம் செய்தீர்கள்? எண்ணெய், பெருங்காயம்! விற்ற பொருள்கள் காலியான பிறகும் அவற்றை வைத்திருந்த பாத்திரங்களில் வாசம் இருக்குமா? இருக்காதா? இருக்கும், சுவாமி! அப்படித்தான் நீங்கள் அனைத்தையும் கொடுத்த பிறகும் அவற்றின் மீதான பற்று இன்னும் உங்களிடம் இருக்கிறது. அதுதான் இறைதரிசனம் கிட்டாததன் காரணம்! என்று சொன்னார் ராமகிருஷ்ண மகான். |
|
|
|