|
தனக்கு தானமாய் வந்த ஒரு ஏக்கர் நிலத்தை ஏழை விவசாயி ஒருவனுக்கு தானம் தந்தார் துறவி ஒருவர். ஒரு ஆண்டுக்குப் பின் திரும்பி வந்த சுவாமிகள், பசுமையான பெரிய தோட்டம், காய்கறி, பூக்கள் பழங்களுடன் அந்த இடம் அழகாய் இருந்தது கண்டு ஆனந்தம் கொண்டார். ஓடி வந்த விவசாயி எல்லாம் உங்கள் ஆசி! என்றான். என்னுடை பங்கு பிரமாதமாக ஏதும் இல்லையே? கடவுளும் நீங்களும் சேர்ந்து இந்த அதிசயத்தை உருவாக்கினீர்கள். அவ்வளவுதான்! என்றார் சுவாமிகள். ஆனால் இங்கே ஓர் ஆண்டுக்கு முன் கடவுள் மட்டும்தான் இருந்தார் சுவாமி! என்றான் விவசாயி. ஆனால் இந்தத் தோட்டம் இல்லை. அது எங்கே இருந்தது? இப்போது எப்படி வந்தது? என்று கேட்டார் சுவாமிகள். விவசாயிக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. இந்த பசுமையான தோட்டத்தின் கருவான மண்வளம், இயற்கையின் சக்தி இந்த மண்ணுக்குள்ளேயே அடங்கியிருந்தது. அதை வெளியே கொண்டு வரும் முயற்சியில் நீ இறங்கினாய். அதற்குரிய மனோபலத்தையும், உடல் பலத்தையும் கடவுள் உனக்குக் கொடுத்தார். இந்த இரண்டு சக்திகளும் சேர்ந்துதான் இந்தத் தோட்டம் உருவானது. இவ்வாறு சேராததனால்தான் இத்தனை நாளும் இது உருவாகவில்லை! என்றார் துறவி. விவசாயிக்கு கடவுளின் மேன்மை புரிந்தது.
|
|
|
|