|
துறவி ஒருவரிடம் வந்த பெண்மணி, சுவாமி! எனக்குத் திருமணமாகி பத்து ஆண்டகள் ஆகின்றன. வாழ்க்கையே நரகமாகிவிட்டது. இனியும் என்னால் கணவரோடு வாழ முடியாது. நீங்கள்தான் ஏதேனும் வழி கூற வேண்டும்! என்றாள். உடனே துறவி அப்பெண்ணை அருகிலுள்ள மலர்த்தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். ஏராளமான பூச்செடிகளில் வண்ணப் பூக்கள் பூத்திருக்க, ரோஜாச் செடி ஒன்றை வியப்புடன் பார்த்தாள் அப்பெண். உனக்கு இந்த ரோஜாச் செடி பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். இதை உன்னிடம் தந்தால் என்ன செய்வாய்? என்று கேட்டார் துறவி. நாள்தோறும் அச்செடிக்குத் தண்ணீர் ஊற்றுவேன். மாதத்திற்கு ஒரு முறை பழைய மண்ணை நீக்கிவிட்டு புதிய மண் இடுவேன். அடிக்கடி உரம் இடுவேன். வெயில் படுகின்ற இடத்தில் இப் பூந்தொட்டியை வைப்பேன். மிகக் கவனமாகப் பார்த்துக் கொள்வேன். என்றாள் அப்பெண். அம்மணி! ஒரு பூச்செடி மீது நீங்கள் காட்டியிருக்கும் அன்பிலும் கவனிப்பிலும் சிறிதேனும் உங்கள் கணவரிடத்தில் காட்டி இருக்கிறீர்களா? யார் எவ்வளவு கொடியவராக இருந்தாலும், நீங்கள் அவரிடத்தில் அன்பு காட்டினால், அவரும் உங்களிடம் அன்பு காட்டியே ஆகவேண்டும். அன்பின் தன்மை அது. நாம் காட்டும் அன்பு எப்போதும் வீணாகாது! என துறவி கூற, அன்பின் வலிமையை அப்பெண் உணரத்தொடங்கினாள்.
|
|
|
|