|
நம்மிடம் நிறைய செல்வம் இருந்தும் மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை. ஆனால் காட்டில் மகான் ஒருவர் எந்த வசதியும் இல்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்ந்து வருகிறார். என, அரசன் ஒருவனுக்கு நீண்ட நாளாக சந்தேகம். பல்லக்கு ஒன்றை மன்னர் அனுப்பிவைத்து, ராஜமரியதையோடு அந்த மகானை அழைத்துவரச் செய்தார். எனக்கு எவ்வளவு வசதிகள் செய்து தருகிறீர்களோ அதே வசதிகளை மகானுக்கும் செய்ய வேண்டும் என உத்தரவும் போட்டார். அவ்வாறே நடந்தது. மகான் சகல சவுகர்யங்களையும் அனுபவித்தார். காலம் கடந்தது. ஒரு சமயம் அரசன் சுவாமி! தாங்கள் எப்படி நிம்மதியாக அரண்மனையில் துயில் கொள்கிறீர்கள்? என்னால் அப்படி முடியவில்லையே? என்று மகானிடம் கேட்டார். உடனே மகான் பஞ்சணையிலிருந்து எழுந்து, அவசர அவசரமாகப் புறப்பட்டு, வாருங்கள் இங்கிருந்து கிளம்பலாம் என்று அரசனை அழைத்தார். அதற்கு அரசன் சுவாமி இப்படியேவா, உடனடியாகவா? கொஞ்சம் பொறுங்கள்! என்று யோசித்தார். எனக்கு ராஜமரியாதை, உபசரிப்பு, சவுகர்யங்கள் எல்லாம் கொடுத்துள்ளீர்கள். நான் உடனே அனைத்தையும் விட்டுவிட்டு புறப்படத் தயாரானேன் ஆனால் உங்களால் முடியவில்லை. இவ்வுலகப் பொருட்கள்மீது யார் பற்று வைக்காமல் இருந்து வருகிறார்களோ, அவர்கள்தான் நிம்மதியாக வாழ முடியும். உறங்க முடியும். பற்றற்ற நிலையே ஞானத்தின் படிக்கட்டு என்றார்.
|
|
|
|