|
மகான் ஒருவர் கிராம மக்களுக்கு நன்னெறிகளை போதித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது போதனை பிடிக்காத ஒருவன். மகான் மீது கல் எறிந்தான். அதைக்கண்டு கோபமடைந்த மக்கள் அவனைத் தாக்க முற்பட்டனர். உடனே மகான் அவரை ஒன்றும் செய்யாதீர்கள்... அவருக்குச் சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை. அதுதான் செயலில் காட்டுகிறார் என்றார். வெட்கிய அந்த நபர், மகானின் காலில் விழுந்து வணங்கினான். மகான் அமைதியாய் இப்போதும் ஏதோ சொல்ல விரும்புகிறார். வார்த்தைகள் கிடைக்கவில்லை. அதனால் செயலில் காட்டுகிறார்! என்றார். |
|
|
|