|
ஞானி ஒருவர், தன் சீடர்களுடன் இறைவனை தரிசனம் செய்யச் சென்றனர். வழியில் நாய் ஒன்று கல்லடிபட்டுக் கிடந்தது. ஞானியும் சீடர்களும் அதனைக் கடந்து நடந்தனர். சற்று தொலைவு சென்றதும் சீடர்களுள் ஒருவனைக் காணாமல் எல்லோரும் திரும்பிவந்தார்கள். காணாமல் போன சீடன், அடிபட்டுக் கிடந்த நாய்க்கு மூலிகை மருந்துபோட்டுவிட்டு, தன் கையில் இருந்த அபிஷேகத்திற்கான நீரை அதற்குப் புகட்டிக் கொண்டிருந்தான். அதனைப் பார்த்த மற்ற சீடர்கள், இறை தரிசனத்திற்கு நேரம் ஆகிவிட்டதாகவும் அபிஷேகத்திற்கான நீரின் புனிதம் கெட்டுவிட்டதாகவும் சொல்லி அவனைக் கடிந்துகொண்டனர். ஞானி அமைதியாக அவனைப் பார்த்தார். இதோ பிற உயிருக்காக இரங்கும் இவன் வடிவில் நான் கடவுளை தரித்துவிட்டேன்! இனி நாம் கோயிலுக்குச் செல்லத் தேவையில்லை, என்று சொல்லிவிட்டு, ஆசிரமம் நோக்கி நடந்தார்.
|
|
|
|