|
குருதேவா, நான் மலை போல உயர ஆசைப்படுகிறேன்..! சொன்ன சீடனிடம் குரு கேட்டார், ஏன்? உயர்வதுதான் பெருமை... புகழ்! பள்ளமாக இருப்பது சிறுமை..! சீடன் பதில் தந்தான். மலையாக உயரும்போதே கர்வமும் சேர்ந்து வளரும் மலைமீது விழும் மழை நீர், வழிந்து வீணாகும். பள்ளமாக இருக்கும்போது பணிவு வெளிப்படும். அதில் விழும் மழைநீர் சேமிப்பாகி பிறருக்கும் உதவும். உன் அறிவு பிறருக்கும் பயன்பட வேண்டுமானால் நீ, எப்படி இருக்க வேண்டும் என்பதை நீயே தீர்மானித்துக்கொள்! உணர்த்தினார் குரு.
|
|
|
|