|
தவறான செயல்களில் ஈடுபட்ட தன் மகனை, அறிஞர் ஒருவரிடம் அழைத்து வந்தாள் அவன் தாய். அந்தச் சிறுவன், தான் பெரியவன் ஆகும்போது திருந்திவிடுவேன் என்றும், சிறுவனாக இருக்கும்போது ஜாலியாக இருப்பதில் என்ன தவறு என்றும் வாதாடினான். அவனை வெளியே அழைத்துப் போன அறிஞர், முள் செடி ஒன்றைக் காட்டி, அதனைப் பிய்த்து எறியச் சொன்னார். அப்படியே செய்தான் சிறுவன். அடுத்து பெரிதாக வளர்ந்திருந்த முள் மரத்தினைப் பிடுங்கிப்போடச் சொன்னார். அது எப்படி முடியும்? சின்னச் செடியை கையாலே கிள்ளிவிடாமல் பெரிய மரத்தை அவ்வளவு எளிதாக சாய்த்துவிட முடியுமா? கேட்ட சிறுவனிடம் அறிஞர் சொன்னார். தவறான பழக்கங்களும் அப்படித்தான். தொடக்கத்திலேயே திருத்திக் கொள்ளவேண்டும். வளர்ந்துவிட்டால் திருத்துவது இயலாததாகி விடும்! அறிஞர் சொன்னதைக் கேட்ட சிறுவன், அப்போதே திருந்தினான்.
|
|
|
|