|
இல்லற வாழ்வை அனுபவித்த பின் ஆன்மிகத் தேடலில் ஈடுபடுவது உலக மக்களின் பொதுவான வழக்கம். இதைப் பற்றி உங்கள் கருத்தை அறியவிரும்புகிறோம், சுவாமி? என்று சீடர்கள் குருவிடம் ஒரு நாள் கேட்டார்கள். உங்கள் பொருட்களுடன் ஓர் ஊரைச் சுற்றிப் பார்க்கச் செல்கிறீர்கள். அங்கு சென்றதும் என்ன செய்வீர்கள்? என குரு கேட்டார். உடனே சீடர்கள் அந்த ஊரை அடைந்தவுடன் தங்குமிடத்தைத் தேடி அங்கு எங்கள் பொருட்களை வைத்துவிட்டு, எந்தச் சிரமமும் இல்லாமல் ஊரைச் சுற்றிப் பார்ப்போம். சுமையைத் தூக்கிக் கொண்டு ஊரைச் சுற்றிவிட்டு இரவு தங்குமிடத்தைத் தேடுவது சிரமமானது மட்டுமல்ல, அறிவற்றதும் ஆகும்! என்றனர். இவ்வளவு தெளிவாக இருக்கும் நீங்கள், ஆன்மிகத் தேடல் விஷயத்தில் மட்டும் அனாவசிய சந்தேகங்களுக்கு ஏன் இடமளிக்கிறீர்கள்? சுமைகளை இறக்கி வைத்து விட்டு உல்லாசமாக ஊர்ப்பயணத்தை அனுபவிப்பதுபோல, நமது வாழ்க்கையில் பெற்ற சுக துக்கங்களை ஒப்புவித்து விட்டு ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்வதுதான் புத்திசாலித்தனம் பற்றற்ற மனதினால் இறைவனடியை எளிதில் பற்றிட முடியும்! என்றார்.
|
|
|
|