|
குருவிடம் அவரது சீடன், நீங்கள் இவ்வளவு பெரிய ஞானியானது எப்படி? என்று கேட்டான். நான் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்தேன். அப்போது ஒரு சருகு மரத்திலிருந்து உதிர்ந்தது. அதையே நான் பார்த்துக் கொண்டிருக்க, எந்தப் பக்கம் காற்று அடிக்கிறதோ அது அந்தப் பக்கம் பறந்தது. காற்று நின்றபோது பூமியில் விழுந்தது. மீண்டும் காற்றடிக்க, மேலே எழுப்பி உயரப் பறந்தது. இந்த மாதிரி லேசான மனதுடன், விருப்பு, வெறுப்பு எதுவும் இன்றி, தன் வேலையை தானே செய்து கொண்டு, எதனாலும் பாதிப்பின்றி இருப்பது எப்படி என்று எனக்குப் போதித்து, பெரிய உண்மையை உணரச் செய்தது! என்று கூறினார்.
|
|
|
|